பொன்னேரி அருள்மிகு ஜடா முனீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, ஆமூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஜடா முனீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக பூஜைகளுடன் தொடங்கிய நிகழ்ச்சியானது மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் விசேஷ முனீஸ்வரர் மந்திரங்களும்,ஓமகுண்ட பிரார்தனையும் நடைபெற்று கடம் புறப்பட்டு அரச மரத்தடியில் வீற்றிருக்கும் ஜடா முனீஸ்வரருக்கு பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நன்நீரானது தெளிக்கப்பட்டது.
அதன் பின்னர் பொதுமக்களின் மேல் நன்னீரானது தெளிக்கப்பட்டது. அதிமுக ஆமூர் கிளைச் செயலாளர் ஏ.இ சேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அஇஅதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் கலந்து கொண்டு ஜடாமுனி ஈஸ்வரரை வழிபட்டார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் செல்வகுமார், வெற்றிவேல் ராமலிங்கம், ஆமூர் செல்வமணி, அலிபாய், கே.டி.ஆர் ரஞ்சித் குமார், காஞ்சிவாயல் குப்பன், சிறுணியம் விஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று பாஜக சார்பில் மாநில தகவல் தொழில்நுட்ப தலைவர் மகேஷ் குமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், சக்தி கேந்திர தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments