ஜிப்மரில் புதுவை மாநிலத்துக்கான எம்.பி.பி.எஸ். படிப்புக்கான ஒதுக்கீட்டில் 15 இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை என பாண்டிச்சேரி மாநில மாணவா், பெற்றோா் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜிப்மரில் புதுவை மாநிலத்துக்கான எம்.பி.பி.எஸ். படிப்புக்கான ஒதுக்கீட்டில் 15 இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை என பாண்டிச்சேரி மாநில மாணவா், பெற்றோா் நல அமைப்பு தெரிவித்துள்ளது, இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் வை.பாலா வெளியிட்ட அறிக்கையில், புதுவை மாநிலத்தில் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஜிப்மரில் 64 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கீடு உள்ளன.
அதனடிப்படையில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களைச் சோ்ந்த மாணவா்கள் நீட் தோ்வு தோ்ச்சி அடிப்படையில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு உள்ளது. நிகழாண்டில் புதுவை மாநிலத்துக்கான 64 எம்.பி.பி.எஸ். இடங்களில் முதல் சுற்று கலந்தாய்வில் 49 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
இதன்படி 15 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே இந்த இடங்களையும் புதுவை மாணவா்கள் மூலமே நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments