சீர்காழியில் மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். தமுமுக மாநில செயலாளர் தைக்கால் முபாரக், ம.ம.க. துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா, உள்ளிட் டோர் பங்கேற்று பேசினர். இதை தொடர்ந்து அப்துல் சமது எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், சர்வ சிக்க்ஷ அபியான் திட்டத்திற்கு மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறது.
கடந்த மாதம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழக எம்பிக்களுடன் டெல்லியில்உள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து தமிழகத்திற்கு வர வேண்டிய இந்த நிதியை விடிவித்து தர வேண்டும் என கோரிக்கை வைத்த போது தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக கையெழுத்து இட்டால்தான் இந்த நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் சொல்லியிருக்கிறார். தேசியக் கல்விக் கொள்கை தமிழ்நாட்டின் தனித்தன்மையை சிதைக்கக் கூடியதாக இருக்கிறது. மும்மொழி கொள்கையை புகுத்தி இந்திய திணிக்க கூடிய ஒரு திட்டமாக இந்த புதிய கல்விக் கொள்கை உள்ளது.
மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற திட்டத்தின் மூலம் அதிகமான மாணவர்களின் கல்வி இடைநிற்றலை செய்யக்கூடிய மோசமான கல்வித் திட்டமாக சமூகநீதியை சவக்குழியில் தள்ளும் திட்டமாக தேசியக் கல்விக் கொள்கை உள்ளதால் இதனை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து சட்டமன்றத்தில் அதை அறிவித்திருக்கக்கூடிய சூழ்நிலையில் நிதியை மறுப்பது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது ஒட்டுமொத்த இந்திய ஒற்றுமைக்கு எதிரானது. இதனை மனித நேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இந்திய அரசு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் எனகேட்டுக்கொள்கிறோம். தமிழகத்தில் இருக்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 36 சுங்க சாவடிகளில் கடந்த ஜூன் மாதம் கட்டணங்கள் உயர்த்திய நிலையில் மீண்டும் தற்போது 25 சுங்க சாவடிகளின் கட்டணங்களை உயர்த்தி இருப்பது வன்மையாக கண்டிக்கக் கூடியது. இது தமிழகத்தில் மக்களிடையே வாகன ஓட்டிகளிடையே வழிப்பறியை திட்டமிட்டு ஒன்றிய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. மனித நேய மக்கள் கட்சி சுங்க சாவடி முற்றுகை போராட்டத்தை நடத்த இருக்கின்றோம். தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் இடையே போதைப் பழக்கம் என்பது மிக மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகம், கல்லூரி ஒன்றில் சோதனை நடத்தப்பட்டு கஞ்சா உட்பட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுமோசமான நிலையில் உள்ளது. தமிழ்நாடு அரசு இரும்பு கரம் கொண்டு போதையை பரப்பக்கூடிய போதைப்பொருட்கள் விற்கக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள்களை முற்றாக நிறுத்துவதற்கு கடுமையான நடவடிக்கை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். தமிழக அரசின் கடந்த கால நடவடிக்கைகள் கஞ்சா வியாபாரிகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தினாலும் முற்றாக ஒழிக்கப்படாதது வருந்தத்தக்கது.
இது அரசு மட்டுமே முயற்சித்தாலும் நடக்க கூடியது அல்ல அனைத்து மக்களுமே போதைக்கு எதிரான ஒரு விழிப்புணர்வை கொண்டுவருதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். வரும் 22 ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக 100 இடங்களில் இரு சக்கர வாகன பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
No comments