உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் கிராமத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக் கொள்ளானதில் வேனின் முகப்பு பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர் ஒரு சுற்றுலா வேனில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு அதே வேனில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர் இவர்கள் வந்த வேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் சென்னை திருச்சி ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையின் இடது புறத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது இதில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
போலீசார் விரைந்து வந்து வாகனத்தின் முகப்பு பகுதியில் நவீன இயந்திரம் கொண்டு உடைத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர் மேலும் விபத்தில் காயமடைந்த 14 பேர் உடனடியாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் அங்கு விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் நடந்த இந்த விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது சுமார் ஒரு மணி நேர போக்குவரத்து நெர்சில் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் விபத்து சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி நேரில் விசாரணை செய்தார்.
No comments