அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு முகாம்.
அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட குழுவும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் இணைந்து நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் திட்டத்தின்படியும், மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களின் அறிவுரையின்படியும், அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முனைவர் முதல்வர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலின்படியும் கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் நிலோபர் பேகம் தலைமை வகித்தார்.
கல்லூரியின் நாட்டுலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் சுந்தரி வரவேற்புரை ஆற்றினார். மாநில சட்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமான சார்பு நீதிபதியுமான சுப்பையா சிறப்புரையாற்ற, வழக்கறிஞர் கண்ணப்பன், மற்றும் வழக்கறிஞர் சங்கீதா ஆகியோர் கருத்துரை வழங்கினர். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் துரை வாழ்த்துரை வழங்கினார். இந்த விழிப்புணர்வு முகாமில் மாணவர்களுக்கு சட்டம் தொடர்பான தகவல்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் முனைவர் செந்தில்குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் சுந்தரி முனைவர் தெய்வமணி, முனைவர் செந்தில்குமார், முனைவர் லட்சுமணக்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments