Breaking News

காரைக்காலில் கோவிலுக்கு சொந்தமான இடங்களை போலி ஆவணங்களை தயாரித்து பொதுமக்களிடம் விற்பனை. இடைத்தரகர் கைது.


காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி அருகே அமைந்துள்ள புகழ் பெற்ற பார்வதிஸ்வரர்  கோவிலுக்கு சொந்தமான இடத்தை அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு விற்பனை செய்வதாக போலியான ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

 

இதனை அடுத்து மாவட்டத் துணை ஆட்சியர் ஜான்சன் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அரசு சார்பில் பொது மக்களுக்கு விற்பனை செய்வதாக போலியான அரசு விளம்பரத்தை தயார் செய்து போலியான ஆவணங்களை உருவாக்கி கோவில் இடங்களை விற்பனை செய்து வந்த வழக்கில் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி பகுதி சேர்ந்த சிவராமன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

அப்பொழுது கோயிலுக்கு சொந்தமான இடத்தை போலியான ஆவணங்களை தயாரித்து 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் விற்பதற்கு இடைத்தரகராக இருந்ததாக சிவராமன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். காரைக்கால் என் ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி ஆனந்த் என்பவரிடம் பணம் வாங்கி கொடுத்ததாக சிவராமன் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் பல்வேறு அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கோவில் இடங்களை அரசு விற்பதாக கூறி போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்கள் விற்ற சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Copying is disabled on this page!