பெட்டி கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1லட்ச ரூபாய் மதிப்பிலான 100கிலோ குட்கா பறிமுதல்; பெண் கைது.
கும்மிடிப்பூண்டி அருகே பெட்டி கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1லட்ச ரூபாய் மதிப்பிலான 100கிலோ குட்கா பறிமுதல்.பெண் கைது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி புதுப்பேட்டை பகுதியில் உள்ள பெட்டி கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிப்காட் போலீசார் அந்த கடையில் ஆய்வு செய்தனர்.
அப்போது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சுமார் 1லட்ச ரூபாய் மதிப்பிலான 100கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் சாரதாவை (38) கைது செய்தனர்.
No comments