உலக நன்மைக்காக சீர்காழி குமரக் கோயிலில் திருப்புகழ் பாடி சிறப்பு வழிபாடு. கோவையிலிருந்து வருகை புரிந்த பக்தர்கள் 4 மணி நேரம் முருகர் பாசுரம் இசைத்து பிராத்தனை.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட குமரக்கோட்டம் என்னும் குமரக் கோயில் அமைந்துள்ளது. மூலவர் வள்ளி தெய்வானை உடன் ஆகிய முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார்.
சூரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்ட முருகப்பெருமான் இக் கோயிலுக்கு தனது படைகளுடன் வந்திருந்து இளைப்பாரி பின்னர் கோயில் தீர்த்தத்தில் நீராடி பின்னர் புறப்பட்டார் என்பது கோவில் வரலாறு. பிரசித்திப்பெற்ற இக்கோயிலுக்கு கோவையிலிருந்து லோகன் நாயகி குழுவினர் சுமார் 20க்கு மேற்பட்டவர்கள் சாந்தா கணேசன், சுகந்த வள்ளி மற்றும் ரவி ஆகியோர் தலைமையில் வருகை புரிந்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு 21 வகையான நறுமணத் திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுமார் 4 மணி நேரம் இக் குழுவினர் வயலின், ஆர்மோனிய இசையுடன் பெண்கள் திருப்புகழ் மெய்யுருக பாடினர். கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர் .
No comments