Breaking News

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


உலகப்புகழ் பெற்றது குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா. இந்த திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவை காண வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் திருநெல்வேலி, கோவை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பல்வேறு காளி, அம்மன், முருகன், சிவன் உள்பட பல்வேறு வேடமிட்டு இந்த திருவிழாவிற்கு வருகை தருவார்கள்.

இந்த சிறப்பு வாய்ந்த குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வருகின்ற 03.10.2024 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 12.10.2024 ஆம் தேதி குலசேகரப்பட்டிணம் கடற்கரையில் நடைபெறும்.

இந்த நிலையில் இந்த குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், இன்று நேரில் ஆய்வு செய்வதற்காக வருகை தந்தார்.

கோவிலுக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் பக்தர்கள் தசரா திருவிழாவின் போது சுவாமி தரிசனம் செய்வதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, பக்தர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட உள்ள தற்காலிக இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதிக்கு ஆய்வு சென்ற அவர் 12ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது அங்கு ஊசி பாசி வியாபாரம் செய்யும் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களுக்கு முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று குற்றம் சாட்டினர். இதையடுத்து அருகில் நின்ற அதிகாரிகளை அழைத்து கேட்டபோது, உடனடியாக செய்து கொடுப்பதாக உறுதி அளித்தனர்.


திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்

No comments

Copying is disabled on this page!