அரசின் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ கல்வி பயில தேர்வு செய்யப்பட்ட திருவண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
புதுச்சேரி -திருவண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து தற்பொழுது அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த பள்ளி மாணவி சிவசக்திக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில் பள்ளியின் துணை முதல்வர் சேவியர் அந்தோணி மாணவிக்கு சால்வை அணிவித்து பள்ளியின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் மாணவியை பாராட்டி சிறப்பித்தனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments