Breaking News

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தில் 10 நாட்கள் நடைபெறும் கிளியம்மன் அய்யனார் கோவில் திருவிழா


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தில் 10 நாட்கள் நடைபெறும் கிளியம்மன் அய்யனார் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கிளியம்மன் தாய் வீட்டிற்க்கு அழைத்து செல்லம் திருவிழா இன்று நடைபெற்றது. 

அப்போது கிளியூர் கிராமத்தில் இருந்து ரகுநாதபுரம் கிராமத்தில் உள்ள கிளியம்மனின் தாய் வீட்டிற்கு கிளியம்மன் அழைத்துவரப்பட்டது உக்கிர குணத்துடன் பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் கிளியம்மன் கிளியூர் கிராமத்தில் இருந்து அழைத்து வரும்பொழுது ரகுநாதபுரம் கிராமம் வரை வழி நெடக்க இருபுறமும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீயிட்டு  அம்மனை சொந்த தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டுக்கு வீடு கடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தில் மிகவும் பழமையான கிளியம்மன் அய்யனார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 3 ஆண்டிற்கு ஒரு முறை கிளியம்மன் கோவில் திருவிழா பத்து நாட்கள் நடப்பது வழக்கம் இந்த ஆண்டுக்கான திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது தினசரி சுவாமி வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கிளியம்மனை தாய் வீட்டிற்க்கு அழைத்து சென்று வீட்டுக்கு வீடு கடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

No comments

Copying is disabled on this page!