மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமையான கருப்பண்ணசாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமையான கருப்பண்ணசாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம், 25 அடி உயர பெரிய கருப்பண்ணசாமிக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாட்டில் கள்ளக்குறிச்சி கருப்பசாமி கோயில் தெருவில் பழமையான கருப்பண்ணசாமி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் கருப்பசாமி ஏழைகாத்த மாரியம்மன், விநாயகர், கோட்டை வீரன் ஆகிய சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன. ஆலயத்தில் உள்ளே 25 அடி உயரத்தில் பெரிய கருப்பண்ணசாமி சுதை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக 25 அடி உயரம் உள்ள பெரிய கருப்பண்ணசாமி சுவாமி சிலைக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
No comments