அய்யன்குளம் நுழைவு வாயிலில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தமிழ்நாடு அரசு எம்பளத்தை மர்ம நபர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ள சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை.
மயிலாடுதுறை மாயூரநாதர் கீழவீதியில் கலைஞர் நகர்புர மேம்பாட்டு திட்டத்தில் நடைபாதை வசதியுடன் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வரும் அய்யன்குளம் நுழைவு வாயிலில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தமிழ்நாடு அரசு எம்பளத்தை மர்ம நபர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ள சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்:-
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் கீழவீதியில் உள்ள தேரடிக்குளம் என்று அழைக்கப்படும் ஐய்யன்குளம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 96 லட்சம் மதிப்பீட்டில் 3 பக்க கரைகள் பலப்படுத்தப்பட்டு நடைபாதை வசதியுடன் சீரமைக்கப்பட்டு மின்விளக்குகள் வைக்கப்பட்டு பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்தக் குளத்தில் உள்ள நடைபாதையை பொதுமக்கள் தினந்தோறும் காலை மாலை மற்றும் மின்விளக்குகள் உள்ளதால் இரவிலும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குளத்தின் கரை பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் மதுபிரியர்கள், சீட்டாட்டக்காரர்களின் கூடாரமாக உள்ளதால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்தக் குளத்தின் முகப்பு பகுதியில் மயிலாடுதுறை நகராட்சி கலைஞர் நகர்புர மேம்பாட்டு திட்டம் அய்யன்குளம் என்ற பெயரைத் தாங்கி முன்னாள் முதல்வர் கருணாநிதி தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உருவப்படங்கள் மற்றும் தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்டு மின்னொழியில் ஜொலிக்கும் வகையில் இருந்த முகப்பு நுழைவு வாயிலை மர்ம் நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
குளத்தின் நுழைவு வாயிலில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் படத்தையும் தமிழக அரசின் எம்பளத்தையும் மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குளத்தின் கரையில் மின்விளக்குகள் அமைத்து தந்து நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments