பிஞ்சு கைகளின் கை வண்ணத்தில் உருவான களிமண் பொம்மைகள் அசத்திய மாணவ மாணவிகள் குவியும் பாராட்டு.
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதிலும் பள்ளிகளில் கலை திருவிழா நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைத் திருவிழா முதற்கட்டமாக தொடக்கப் பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ளது மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று கலை திருவிழா குறிப்பாக பாரம்பரியத்தை போற்றும் வகையில் களிமண் பொம்மைகள் செய்யும் விழா நடைபெற்றது.
இதில் மூன்று நான்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் களிமண் பொம்மைகள் செய்தனர் தங்களின் பிஞ்சு கைகளால் பல்வேறு வகையான களிமண் பொம்மைகளை அவர்கள் செய்தனர் களிமண் பொம்மைகளை அவர்கள் செய்யும் பொழுது அவர்களின் ஆர்வத்தை பார்த்து ஆசிரியர்கள் வியந்து பாராட்டினர் ஒவ்வொருவரும் தங்கள் பிஞ்சு கைகளால் போட்டி போட்டுக் கொண்டு களிமண் பொம்மைகளை உருவாக்கினர் பல்வேறு வகைகளான களிமண் பொம்மைகளை உருவாக்கி அவற்றிற்கு வண்ணம் பூசி காட்சிப்படுத்தினர் சிறந்த களிமண் பொம்மைகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அடுத்த கட்ட போட்டியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது இந்த கலைத் திருவிழா தலைமை ஆசிரியை ரேவதி உதவி தலைமை ஆசிரியர் திருமால் ஆசிரியைகள் சாந்தி ராணி அம்மாள் புவனேஸ்வரி இவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.
இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
No comments