செண்பகாரன்யேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தெய்வ சக்தியை கடங்களுக்குள் ஆவாகனம் செய்யும் கலாகர்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோட்சங்க சோழனால் கட்டப்பட்ட 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாடக்கோயில் ஆன வைகல் செண்பகாரன்யேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தெய்வ சக்தியை கடங்களுக்குள் ஆவாகனம் செய்யும் கலாகர்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவைகல் கிராமத்தில் வைகல்நாத சாமி எனப்படும் செண்பகாரன்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி கரையோர சிவாலயங்களில் 33வது ஆலயமான இந்த கோயிலின் கும்பாபிஷேகம் எட்டாம் தேதி நடைபெறுகிறது இதனை முன்னிட்டு முதல் காலை யாகசாலை பூஜைகள் இன்று துவங்கியது.
இதனை ஒட்டி கோயில் கர்ப்பகிரகங்களில் இருக்கும் தெய்வீக சக்தியை புனித நீர் அடங்கிய கடங்களுக்குள் எழுந்தருள செய்யும் கலாகர்ஷணம் நிகழ்ச்சி நடைபெற்றது இதனை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கடங்களுக்கு வேதியர்கள் மந்திரம் ஓதி மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கோயில் கர்ப்ப கிரகங்களுக்கு புனித நீர் அடங்கிய கடன்கள் எடுத்து செல்லப்பட்டு கலாகர்ஷனம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments