பகண்டை கூட்டுச்சாலை அருகே மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில்,மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, வாணாபுரம் வட்டம், பகண்டை கூட்டுச்சாலை அருகே, அரியலூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம்கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமினை துவக்கி வைத்து, நேர்காணலில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி,தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு பணி ஆணைகளை பெற்றார்கள்.
No comments