திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட பேரவை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் 1 மணி அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பத்தூர் மாவட்ட பேரவை கூட்டம் மற்றும் ஜனசக்தி ஆண்டு சந்தா வழங்கும் விழா மாவட்ட செயலாளர் சுந்தரேசன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட குழு உறுப்பினர்கள் சாமிக்கண்ணு, முல்லை, வெங்கடேசன் மற்றும் திருப்பத்தூர் நகர செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் வீரப்பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் ஜனசக்தி ஆண்டு சந்தா வசூலிக்கப்பட்டது. மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் நந்தி நன்றி கூறினார்.
No comments