குடிநீர் குழாய் மட்டும் இருக்கிறது தண்ணீர் வந்து மூன்று மாதம் ஆகிவிட்டது- வேதனையுடன் தெரிவிக்கும் ஈராச்சி கிராம மக்கள்,
தூத்துக்குடி மாவட்டம் நல்லா இருந்த ரோட்டை தோண்டி போட்டு ரெண்டு மாசம் ஆச்சு - பணிகளை தொடங்கவில்லை - சாலையில் நடக்கும் முடியாமல் விபத்துக்களை சந்தித்து வரும் மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது ஈராச்சி கிராம். இந்த கிராமத்தில் உள்ள மேற்கு முதலியார் தெரு பகுதியில் இருந்த சிமெண்ட் சாலையை சீரமைக்க போவதாக கூறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தோண்டி போட்டுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் உள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலையில் கிடக்கும் கற்களால் நடந்து செல்லும் பொது மக்கள் தவறி கீழே விழுந்து அடிபட்டு வருகின்றனர். விரைந்து பணிகளை தொடங்க வலியுறுத்தி பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் தற்போது வரை பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
நல்லா இருந்த ரோட்டை சீரமைக்கப் போவதாக கூறி தோண்டி போட்டு ரெண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது, இதுவரை எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என்பதால், மிகுந்த சிரமம் அடைந்து வருவதாகவும்,, சாலையில் நடக்க முடியாமல் பலரும் கீழே விழுந்து அடிபட்டு வருவதாகவும்,, விரைந்து பணிகளை முடிக்க கோரிக்கை வைக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தங்கள் பகுதியில் குடிநீர் குழாய்கள் உள்ளன ஆனால் தண்ணீர் வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments