அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியடிகளின் பிறந்தநாளில் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு
உளுந்தூர்பேட்டையில் திருமாவளவன் பேட்டி |
அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியடிகளின் பிறந்தநாள் மதுவிலக்கு அவரது உயிர் மூச்சு கொள்கை ஆகவே அந்த நாளில் அந்த கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைநிலை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறுகிறது இந்த மாநாட்டில் தோழமை கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்க உள்ளனர்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா பங்கேற்று உரையாற்ற உள்ளார்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் வாசுகி பங்கேற்று உரையாற்றுகிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் மகளிர் தேசிய செயலாளர் ஹானி ராஜா பங்கேற்று கருத்துரை வழங்க இருக்கிறார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மருத்துவர் ரொகையா பேகம் வருகிறார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய தோழமை கட்சிகளின் சார்பில் மகளிர் அணி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மகளிர் அணி தலைவர் முத்துலட்சுமி வீரப்பன் பங்கேற்று உரையாற்றுகிறார்,
அனைத்து கட்சியிலிருந்தும் மகளிர் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறோம்.
விடுதலை சிறுத்தை கட்சியின் மகளிர் அணியான மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் நற்சோணி பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார் இரண்டு கோரிக்கைகள் இரண்டு அரசு காண தமிழ்நாடு அரசுக்கு முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் மது கடைகளை மூட வேண்டும் மதுவிலக்கு தொடர்பான பரப்புரைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் மகளிர் சுய உதவிக் குழுக்களை அதற்கு பயன்படுத்த வேண்டும் மது கடைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிற தொழிலாளர்களை வேறு துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் இது தமிழ்நாடு அரசுக்கு நாங்கள் முன் வைக்கக்கூடிய கோரிக்கையாகும் இந்திய ஒன்றிய அரசுக்கு அரசமைப்புச் சட்டம் 147 தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கையை வரையறை செய்ய வேண்டும் அதற்கு தனி சட்டம் ஏற்ற வேண்டும் என்பதாகும்.
இது புதிய கோரிக்கை அல்ல பேரறிஞர் அண்ணா அவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்
அப்போதைய காங்கிரஸ் அரசு இது தொடர்பாக மதுவிலக்கு ஆலோசனை குழு ஒன்றை அமைத்தது அந்தக் குழு பல பரிந்துரைகளை 1955 லே வழங்கியிருக்கிறது அந்த பரிந்துரைகளின் படி இந்திய ஒன்றிய அரசு மதுவிலக்கு தொடர்பாக சட்டம் ஏற்ற வேண்டும் என முக்கிய கோரிக்கையாகும் மாநில அரசு குறிப்பிட்ட காலக்கெடு குள்ள மதுவிலக்கு நடை முறைப்படுத்த முன்வர வேண்டும் என்பதும் அந்த சட்டத்தில் பரிந்துரையை முக்கியமானதாகும் அதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தால் தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை நடை முறைப் படுத்தப் படும் எனக் கூறினார் தொடர்ந்து பேசிய திருமாவளவன் வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பூரண மதுவிலக்கு வேண்டும் என தீர்மானம் ஏற்ற ஊராட்சி பிரதிநிதிகளுக்கு வலியுறுத்தினார்.
No comments