Breaking News

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மேற்கு ஆப்பிரிக்க பல்கலைக் கழகப் பேராசிரியர் கலந்துகொண்ட சர்வதேச இயற்பியல் கருத்தரங்கம் நடைபெற்றது.


காரைக்குடி,  அழகப்பா அரசு கலைக்கல்லூரியில்  இயற்பியல் துறை சார்பில் 'பொருள் அறிவியலில் ஆராய்ச்சி வாய்ப்புகள்' என்ற தலைப்பில் சர்வதேசக் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வரும், வரலாற்றுத் துறை தலைவருமான முனைவர் நிலோபர்பேகம் தலைமை வகித்தார்.இதில் மேற்கு ஆப்பிரிக்கா பல்கலைக் கழகப் பேராசிரியர் மொசபேலா  பெனிட்டோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மெல்லேடுகளை கொண்டு உருவாகும் சூரிய மின் கலன்கள் பற்றி பேசினார். 

பூண்டி புஷ்பம் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் ரவிச்சந்திரன் நானா பொருட்கள் உருவாக்கம் அதன் பயன்கள் என்ற தலைப்பில் பேசினார். முன்னதாக பேராசிரியர் சுப்பு வரவேற்க,  துறைத் தலைவர் கவிதா கருத்தரங்க நோக்கம் பற்றி பேசினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவல் துறை பேராசிரியர் பூமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறை பேராசிரியருமான முனைவர் பேராசிரியர் கருணாகரன் நன்றி கூறினார். கருத்தரங்கில் பேராசிரியர்கள் தெய்வமணி, ஆசைத்தம்பி மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பலரும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments

Copying is disabled on this page!