இந்திய கடலோரக் காவல்படை சார்பில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி காந்தி சிலை அருகே நடைபெற்ற கடலோர தூய்மைப் பணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்.
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை ஒட்டி இந்திய கடலோரக் காவல்படை சார்பில் புதுச்சேரி கடற்கரை, காந்தி சிலை அருகில் இன்று நடைபெற்ற கடலோர தூய்மைப் பணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர் தட்சணாமூர்த்தி @ பாஸ்கர் பங்கேற்றனர்.
மேலும்,அரசு செயலர்கள் பத்மா ஜெய்ஸ்வால், ஜெயந்தகுமார் ரே, காவல்துறை தலைமை ஆய்வாளர் அஜித்குமார் சிங்ளா, இந்திய கடலோரக் காவல்படை கமாண்டன்ட் தசிலா, புதுச்சேரி நகராட்சி ஆணையர் திரு கந்தசாமி மற்றும் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த தேசிய மாணவர்ப்படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அதிகாரிகள் கலந்த கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
No comments