சர்வதேச கடற்கரை தூய்மை தினம் ஏராளமான கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
காரைக்கால் கடலோர மீனவ கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் இன்று சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன, இதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகம் சார்பாக காரைக்காலில் அமைந்துள்ள கீழகாசாக்குடி மேடு மீனவப் பகுதியில் உள்ள கடற்கரையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் காரைக்காலின் முக்கிய பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்மற்றும் விநாயக மிஷின் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மற்றும் புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம், (NCSCM), இந்திய அரசு, சென்னை புதுச்சேரி கடற்கரை மேலாண்மை அதிகார அமைப்பு ஆகியோர் இணைந்து இந்தத் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உதவி இயக்குனர் ஆஞ்சல் ஜெயின், நகராட்சி ஆணையர் சத்யா, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பாலன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments