மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த போது: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை திறப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது 87 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட வங்கி ஆகும். இது ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாகும். இந்தியா முழுவதும் 3236 கிளைகளை கொண்டு இயங்கும் சிறப்பான வங்கியாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் 22 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகள் இயங்கி வந்தது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23-வது கிளை திறந்து வைக்கப்படுகிறது.
இவ்வங்கி அனைத்து வகையான அலுவல்கள் மற்றும் மக்களின் நிதிசார் தேவைகளை அறிந்து செயல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்போது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் ஆர்.ராகேஷ் துணை பொது மேலாளர் எபிநேசர் சோபியா, முன்னோடி வங்கி மேலாளர் லியோ ஃபேண்டின் நாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சந்தான கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments