திண்டிவனத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 36.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம்; அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திண்டிவனம் நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 36.28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை திறக்கும் நிகழ்ச்சி நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.நகர மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் அனைவரையும் வரவேற்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு சுகாதார வளாகத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.இதில் மாவட்ட பொருளாளர் ரமணன், நகரச் செயலாளர் கண்ணன், வி.சி.க மாவட்ட செயலாளர் மலைச்சாமி,திமுக நிர்வாகிகள் விக்னேஷ்வர் சிங், பிரகாஷ், காதர் நவாஸ், பாஸ்கர்,சின்னதுரை, மற்றும் விசிக நிர்வாகிகள் பூபால், வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments