Breaking News

அருமந்தை ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் அருமந்தை ஊராட்சியில் பழுதான நிலையில் இருந்த  அங்கன்வாடி மையம் கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டித் தர வேண்டி அப்பகுதி பொது மக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன் முயற்சியால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 10.லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டப்பட்டன. 

இந்தக் கட்டிடத்தை அருமந்தை ஊராட்சி மன்ற தலைவரும் திருவள்ளூர் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளருமான சி. விக்ரமன் குழந்தைகள் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி மையம் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கட்டிடத்தை திறக்க வருகை தந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு அங்கன்வாடி பணியாளர்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். குழந்தைகள் பயன்பாட்டுக்காக எல் இ டி டிவி, சேர், டேபிள், விளையாட்டு உபகரண பொருட்கள் உள்ளிட்டவை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் விஜயகுமார், பாலு, ஊராட்சி செயலாளர் தேவராஜ், அங்கன்வாடி பணியாளர் கோமதி, உதவியாளர் வரலட்சுமி, கிராம பெரியோர்கள் நாகராஜ், விஜய ராவ், சேகர், சந்தானம், சபாபதி, ஆழ்வார், தசரதன், மற்றும் கிராம மகளிர் குழு பெண்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக அங்கன்வாடி மையம் கட்டிடம் முன்பாக மரக்கன்று நடப்பட்டது.

No comments

Copying is disabled on this page!