Breaking News

சமூக நீதி போராளி போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் 67வது நினைவேந்தல் நிகழ்ச்சி


தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டி கிராம பொதுமக்கள் சார்பாக சிறப்பாக நடைபெற்றது, ஊர் செயலாளர் பா.செந்தில் குமார் தலைமையில் ஊர் பொருளாளர் ரமேஷ்  வரவேற்புரை ஆற்ற ஊரில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்களும் கலந்து கொண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள்.

மதிமுக மாவட்ட செயலாளர் இராமகிருஷ்ணன், மநேம கட்சி மாவட்டத் தலைவர் முகமது ரபிக், மாவட்டச் செயலாளர் அப்பாஸ் மந்திரி, தெ.இ.பா.பிளாக் மாவட்ட பொ.செயலாளர் பாண்டியராசன், எஸ் டி பி கட்சியின் நகரச் செயலாளர் உமர், ஆண்டிபட்டி திமுக நகரத் துணைச் செயலாளர் ஆர் கண்ணன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமசாமி, பெரியார் உணர்வாளர் திராவிட தமிழன், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ஐந்தாவது ஆறாவது வார்டு திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் 100 வயதான தாய்மார்களுக்கும் கைம்பெண்களுக்கும் இலவச சேலை கிராமத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இறுதி நிகழ்ச்சியாக ஊரில் உள்ள அனைத்து மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இறுதியில் ஊர் தலைவர் பூ மணிகண்டன் நன்றி கூறினார்.

No comments

Copying is disabled on this page!