உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட புகையிலேயே திருநாவலூர் காவலர்கள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜாவிற்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அந்த கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் பூராமூர்த்தி 60 என்பவரது கடையில் சோதனை செய்தனர்.
அங்கு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5 கிலோ எடை கொண்ட சுமார் 500 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து போலீசார் கூராமூர்த்தியை கைது செய்து திருநாவலூர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர் எலவனாசூர்கோட்டையில் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த தண்ணி கேன் போடும் தொழில் செய்து வரும் கேசவன் 52 என்பவரிடம் மொத்தமாக புகையிலை பொருட்களை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேசவனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஐந்து கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். உளுந்தூர்பேட்டை அருகே பெட்டிக்கடையில் கிலோ கணக்கில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments