குத்தாலம் அருகே திடீர் தீ விபத்து நேரில் சென்று ஆறுதல் கூறிய பூம்புகார் எம் எல் ஏ.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கருப்பூர் ஊராட்சி கரை கண்டம் மாதா கோவில் தெருவில் சேர்ந்தவர் ஜெயமேரி இவரது கூரை வீடு இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்த நிலையில் உடனடியாக அக்கம்பக்கத்தினர் தீயினை அணைத்தனர் தீ விபத்து குறித்து தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம்எல்ஏ பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கோமல் மில்லர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
No comments