திருத்தணியில் தீ விபத்தில் 2 குழந்தைகளுடன் கணவன் மனைவி சிக்கிக் சம்பவத்தில் மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகப்பநகர் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 3 இரு சக்கர வாகனங்கள் எரிந்த தீ விபத்தில் சிக்கி பிரேம்குமார் (32), அவரது மனைவி மஞ்சுளா (31) அவர்களது குழந்தை மிதுலன் (2), நபிலன்(1) 4 பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை நபிலன் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த பிரேம்குமார், மஞ்சுளா மற்றும் மிதுலன் ஆகிய 3 பேர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மிதுலன் உயிரிழந்தார்.
No comments