விநாயகர் சதுர்த்திய ஒட்டி காரைக்கால் நகரப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காரைக்கால் மாவட்டம் முழுவதும் சுமார் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் நகர பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
புகழ்பெற்ற காரைக்கால் ஏழை மாரியம்மன் கோயிலில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ சக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி தலைவர் கணேஷ், நகரத் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இன்று பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் நாளை மறுநாள் ஏழை மாரியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தில் உள்ள வங்க கடலில் கரைக்கப்பட உள்ளது.
No comments