தமிழ்நாட்டில் அனைவரும் உயர்கல்வி கற்கும் சூழலை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் அமைச்சர் கீதாஜீவன்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்கம் ஆகிய நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் பெண்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி, பிரசார வாகனம் ஆகியவற்றை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற ஒரு நோக்கத்தோடு தமிழ்நாடு முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அழகு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் ஒரு நிகழ்ச்சியாக தூத்துக்குடி காமராஜ் பெண்கள் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பேரணி நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகள் கல்வி பெறுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியது கட்டாயமாக இருக்கிறது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அழகு, கல்வித்துறை மற்றும் காவல்துறை இனைந்து அனைத்து பள்ளிகளிலும் முதற்கட்டமாக 9 முதல் 12 வரை பயிலும் மாணவியர்களுக்கும், அடுத்த கட்டமாக 1 முதல் 8 வரை படிக்கும் நடுநிலை பள்ளியை சேர்ந்த மாணவிகளுக்கும் என்றும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்களை சந்தித்து விழிப்புணர்வு, உதவி எண்கள், பாலியல் சம்பந்தப்பட்ட பிச்சனைகள் குறித்த விழிப்புணர்வு, ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு, அரசின் திட்டங்களான புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் போன்றவை குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு செய்யப்பட உள்ளது.
பெண் குழந்தைகளை பாதுகாக்க தொட்டில்குழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்ப சூழ்நிலையினால், குழந்தைகளை வளர்க்க முடியவில்லை, என்று நீங்கள நினைத்தால் சமூக நலத்துறையினரிடம் ஒப்படைக்கலாம். மேலும், மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு மருத்துவமனை, குழந்தைகள் பாதுகாப்பு அழகு, அரசு உதவிபெறும் குழந்தைகளிகளின் இல்லங்கள் ஆகியவற்றில் குழந்தைகளை ஒப்படைக்கலாம். எனவே குழந்தைகளை வளர்க்க முடியவில்லை என நினைப்பவர்கள் சமூக நலத்துறையினரிடம் ஒப்படைக்கும் போது சமூக நலத்துறை அந்த குழந்தைகளுக்கு கல்வி, உறைவிடம் அனைத்தும் வழங்கி அக்குழந்தையின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும்.
கடந்த மார்ச் மாதம் வரை 175 குழந்தைகள் சமூக நலத்துறைக்கு வந்துள்ளது. அந்த குழந்தைகளை பராமரித்து வருகிறோம். தத்துக்கொடுக்கும் திட்டத்தின் மூலம் சட்டமுறைப்படி, தத்துக்கொடுத்தும் வருகிறோம். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பெண்கள் உயர்க்கல்விக்கு போகும் சராசரி எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 52 சதவீதம் உயர்ந்துள்ளது என உயர்கல்வித்துறையினுடைய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இளைஞர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த சமுதாயமும் உயர்கல்வி பெறக்கூடிய நிலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, கல்லூரி முதல்வர் வான்மதி, சமூக நலத்துறை அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments