நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
மேலும் இந்த ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 440 வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால் கிராம மக்கள் தொகையில் 66 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர். 34 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தவர்கள் ஒருவர் கூட இந்த கிராமத்தில் இல்லை. இருப்பினும் இந்துமதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்போது ஒட்டுமொத்த மக்கள் தொகையின் விகிதாச்சார அடிப்படையில் தான் இடஓதுக்கீடு பின்பற்ற வேண்டும் என விதி உள்ளது. இருப்பினும் இங்கு முறையாகப் பின்பற்றப்படவில்லை என தேர்தல் ஆணையத்திடமும் முதலமைச்சரின் தனி பிரிவிலும் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.,
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்துமதி பதவி ஏற்பதை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர், இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வி.கே. இளந்திரையன் அமர்வில் இன்று (20.09.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்தது ரத்து செய்யப்படுகிறது. மேலும் ஊராட்சி மன்றத் தலைவராக இந்துமதி தேர்வு செய்யப்பட்டதும் ரத்து செய்யப்படுகிறது. 4 வாரங்களில் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண் அல்லது பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
- பு.லோகேஷ், திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்.
No comments