Breaking News

வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் மின் கம்பி உரசியதால் லாரி தீப்பிடித்து எரிந்து சேதம், காயமடைந்த லாரி டிரைவர் மருத்துவமனையில் அனுமதி.


மயிலாடுதுறை மாவட்டம் மாந்தை என்ற இடத்தில் வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் மின் கம்பி உரசியதால் லாரி தீப்பிடித்து எரிந்து சேதம், காயமடைந்த லாரி டிரைவர் மருத்துவமனையில் அனுமதி.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை என்ற இடத்தில் இன்று நெல் வைக்கோல் ஏற்றி வந்த லாரி அப்பகுதியில் தாழ்வாக இருந்த மின் கம்பியில் பட்டு தீ பிடித்தது. தீப்பிடித்தது தெரியாமல் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் லாரியை டிரைவர் ஓட்டி வந்துள்ளார். 

இன்னிலையில் மளமள என தீ பரவியதை தொடர்ந்து லாரி டிரைவர் அங்கமுத்து அருகில் இருந்த குளத்தில் லாரியை இறக்க முயற்சி செய்தார். அதற்குள் தீ வேகமாக பரவியது. லாரியிலிருந்து டிரைவர் அங்கமுத்து தீக்காயங்களுடன் வெளியே குதித்து உயிர் தப்பினார். 


தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். லாரி டிரைவர் அங்கமுத்து தீக்காயங்களுடன் கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Copying is disabled on this page!