திடீரென தீபிடித்த வைக்கோல் லாரி, உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் வைகோல் லாரி தீ விபத்துக்கள், மயிலாடுதுறை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் லாரி தீயில் எரிந்து சேதம், அருகில் மரவாடி இருந்த நிலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது நெல் அறுவடை முடிந்து வயலில் உள்ள வைகோல்கள் தனியார் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவை சேலம் நாமக்கல் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் பெரிய வைக்கோல் கட்டுகளாக கட்டப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் வைகோல் லாரிகளில் சிறு நெருப்பு பொறிப்பட்டாலும் அவை எரிந்து விடுகின்றன.
நேற்று முன் தினம் மாந்தை என்ற இடத்தில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்த நிலையில், இன்று மயிலாடுதுறை நகரில் முத்து வக்கீல் சாலையில் டெலிபோன் எக்சேஞ்ச் அருகில் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்தது தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அருகே மரங்களை அறுக்கும் மரவாடி உள்ள நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்வாரியத் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் வைக்கோல் விபத்துகள் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments