Breaking News

திருநள்ளார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கிராமிய நடன போட்டியில் முதல் பரிசை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு.


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் மக்கள் தொகை கல்வி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கிராமிய நடன போட்டி மற்றும் நாடகப் போட்டி நடைபெற்று வருகின்றது.  மாவட்ட அளவில் இப்போட்டிக்கான தேர்வு காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் காரைக்கால் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டது. இப் போட்டிகளில் பல்வேறு அரசு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

இதில் திருநள்ளார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்  கிராமிய நடன போட்டி மற்றும் நாடக போட்டி ஆகிய இரண்டு போட்டிகளிலும் முதல் பரிசை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி  விஜயமோகனா  பரிசினை வழங்கினார். 

நடன பயிற்சி மற்றும் நாடகப் பயிற்சியினை பள்ளியின் ஆசிரியர் கலைமாமணி ப.முருகன்  அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Copying is disabled on this page!