பாகூர் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை உருவாக்க வேண்டும் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
பாகூர் பகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும், பாகூர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை உருவாக்கிட வேண்டும், 10,000 மேற்பட்ட அரசு காலி பணியிடங்கள் நிரப்பிட வேண்டும், பாகூர் அரசு மருத்துவமனையை சமுதாய நல மையமாக மாற்ற வேண்டும், புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணமாக ரூபாய் 5000 வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பாகூர் இடைகமிட்டி சார்பில் பாகூர் பெரிய கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாகூர் கொம்யூன் தலைவர் அஜித் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கௌசிகன், மாநில செயலாளர் சஞ்சய்சேகரன், மாநில பொருளாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில், பிரசாந்த்குமார், பாகூர் கொம்யூன் செயலாளர் ஜெயராஜ், மாநில குழு உறுப்பினர் சிந்து விளக்க உரையாற்றினார்கள். இறுதியாக தனலட்சுமி உட்பட 50கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி.
No comments