புதுச்சேரியில் ரூ.3.88 கோடியில் துணைநிலை ஆளுநருக்கான புதிய குடியிருப்பு கட்டுவதற்கான பணியினை கவர்னர் கைலாசநாதர், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி பாரதி பூங்கா அருகே துணைநிலை ஆளுநா் மாளிகையான ராஜ் நிவாஸ் உள்ளது. சுமாா் 250 ஆண்டுகள் பழமையான பிரான்ஸ் கால கட்டடமான ராஜ்நிவாஸ் தற்போது உறுதிதன்மை குறைந்து காணப்படுவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அதில் மராமத்துப் பணிகள் தொடங்கப்பட்டன. மேலும், ராஜ் நிவாஸ் அலுவலகத்தை கடற்கரைச் சாலையில் பழைய சாராய வடி ஆலை இருந்த இடத்தில் உள்ள கட்டத்துக்கு மாற்றுவதற்கும் முடிவாகியுள்ளது. ஆலை அருகில் சுமாா் 3 ஏக்கா் உள்ள அந்த வளாகத்தில் 3,000 சதுர அடி இடத்தில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கடல் அழகை ரசிக்கும் வகையில் குடும்ப பொழுதுபோக்கு மையம் ரூ.13 கோடியில் இரு தளங்களாகக் கட்டடப்பட்டது.
அந்த இடத்தில் துணைநிலை ஆளுநா் மாளிகையை இடமாற்றம் செய்வதற்கான பணிகள் ரூ.3.88 கோடியில் நடைபெறவுள்ளது. அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில் துணைநிலை ஆளுநா் .கைலாஷ்நாதன், முதல்வா் ரங்கசாமி, பொதுப் பணித் துறை அமைச்சா் லட்சுமி நாராயணன், துணைநிலை உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இரா.சரவணன்
செய்தியாளர் புதுச்சேரி
No comments