Breaking News

ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதராப்பட்டு கரசூர் தொழிற்பேட்டையில் கவர்னர் கைலாசநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


புதுச்சேரி மாநிலம் ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதராப்பட்டு கரசூர் தொழிற்பேட்டையில் கவர்னர் கைலாசநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் புதுச்சேரி மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், புதிய தொழிற்சாலைகளை துவங்குவதற்கான திட்ட வரைவை உருவாக்கவும் அதற்கான உள் கட்டமைப்பை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தொழிற்சாலை ஒன்றை பார்வையிட்டு தொழிலாளிடம் கலந்துரையாடினார். இதில் அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஊதியம் குறித்து விவரமாக கேட்டறிந்தார். ஆய்வின் போது அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், தொழில் துறை இயக்குனர் ருத்ரகவுடு, சேதராப்பட்டு தொழிற்சாலைகள் சங்க தலைவர் நாராயணன் திருப்பதி ஆகியோர் உடன் இருந்தனர். 

No comments

Copying is disabled on this page!