சேதராப்பட்டில் புதுப்பிக்கப்பட்ட அரசு கிளை நூலக கட்டிடத்தை அமைச்சர்கள் சாய் ஜெ சரவணகுமார், திருமுருகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சேதராப்பட்டு பகுதியில் புதுப்பிக்கப்பட்ட அரசு கிளை நூலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலை பண்பாட்டு துறை அமைச்சர் திருமுருகன், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருமான சரவணன் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு துறைஇ அரசு செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் கலியபெருமாள் மற்றும் தொகுதி பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகங்களுக்கான பிரிவு, வலைதள உலாவுதல் பிரிவு, பெண்கள் படிப்பதற்கான புத்தகங்கள், சிறுவர் பிரிவு பாட புத்தகங்கள், நாவல்கள் மற்றும் சிறுகதை புத்தகங்கள், கணினி வாயிலாக போட்டி தேர்வு புத்தகங்கள், புத்தகங்களை படிக்கும் வசதி என ஏராளமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
No comments