மின்திறல் வரைநிலைக் கழகம் மூலம் 2021-22 ஆண்டுக்கான அரசின் லாப ஈவுத் தொகை ரூ.6.90 கோடிக்கான காசோலையை முதல்வா் ரங்கசாமியிடம், அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
புதுச்சேரி மின்திறல் வரைநிலைக் கழகம் காரைக்காலில் உள்ளது. அங்கு, கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் எரிவாயுச் சுழலிலிருந்து 22.9 மெகாவாட் மின்சாரம், நீராவிச் சுழலிலிருந்து 9.6 மெகாவாட் மின்சாரம் என மொத்தம் 32.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2021-22 ஆம் ஆண்டில் ஈட்டிய லாபத்துக்கான ஈவுத் தொகை ரூ.6.90 கோடியாகும். அதற்கான காசோலையை முதல்வா் ரங்கசாமியிடம், மின் துறை அமைச்சா் நமச்சிவாயம் வழங்கினாா்.
மின்திறல் வரைநிலைக் கழகம் தொடங்கியதிலிருந்து இதுவரை அரசுக்கு ஆதாய ஈவாக ரூ.52.21 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் நாக தியாகராஜன், மின்திறல் வரைநிலைக் கழகச் செயற்பொறியாளா் சந்தோஷ் ராமச்சந்திரன், மேலாளா் கென்னடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments