பேரணாம்பட்டில் புதிய திரையரங்கத்தில் வெளியாகிய Goat திரைப்படம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இன்று வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது இந்தத் திரைப்படமானது பேர்ணாம்பட்டில் சுமார் 28 ஆண்டுகள் பழமையான ராமச்சந்திரா திரையரங்கம் தற்போது 4 கோடி ரூபாய் செலவில் நவீனமாக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று முதன்முறையாக Goat திரைப்படம் வெளியிடப்பட்டது.
அப்போது ரசிகர்கள் திரையரங்கத்தில் உள்ளே சென்று திரைப்படம் துவங்கியவுடன் பலத்த ஆரவார சத்தத்துடன் விஜய் வாழ்க என்று சொல்லியும் விசில் அடித்தும் திரைப்படத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர் இதைப் பற்றி திரையரங்க உரிமையாளர் மதன்குமார் இடம் கேட்டபோது நான் இதுவரைக்கும் இதுபோன்று கூட்ட நெரிசலை பார்த்ததே இல்லை இப்போதுதான் முதன்முறையாக காண்கிறேன் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து பேர்ணாம்பட்டு நகர விஜய் ரசிகர் மன்ற தலைவர் மா. கருணா சுனில் குமாரிடம் கேட்டபோது ராமச்சந்திரா திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு திரையிடப்பட்ட முதல் திரைப்படம் இது என்பதால் இன்று விஜய் ரசிகர் மன்ற தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் ரசிகர்கள் பொதுமக்கள் ஒத்துழைப்போடு அனைவரும் மகிழ்ச்சியோடு திரைப்படத்தைக் காண வந்ததாக தெரிவித்தார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments