மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலயத்தில் 445 ஆவது மகிமைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கடற்கரையோரம் மலைகுன்று மேல் அமைந்துள்ளது திருச்சிலுவை நாதர் ஆலயம். இத்திருத்தலத்தில் ஆண்டு தோறும் 11 நாள்கள் மகிமைப் பெருவிழா நடைபெறும். இந்த நிலையில் இன்று 445 ஆவது மகிமை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை பங்கு ஆலயத்தில் திருப்பலியும், அதைத் தொடர்ந்து கொடி பவனியும் நடந்தது. திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலி, திருச்சிலுவை ஆசீரைத் தொடர்ந்து கொடிமரத்தின் முன்பு கொடி அர்ச்சிப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து கொடிமரத்தில் பெருவிழா கொடி ஏற்றப்பட்டது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சி செப்.13-ஆம் தேதி காலை மணப்பாடு மக்கள், திருப்பயணியர் பங்கேற்பில் பங்கு ஆலயம், திருத்தலம் மற்றும் திருயாத்திரை திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments