Breaking News

பொன்னேரி அருகே பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகள் கழிப்பறை சுகாதாரமற்ற முறையில் கிடப்பதாக புகார். மாணவிகள் புகார் பெட்டிக்கு எழுதிய கடிதங்கள் வைரல்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகள் இல்லாமலும், சுகாதாரமற்ற முறையில் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. 

மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் அனைத்தும் முறையாக தூய்மை பணிகள் மேற்கொள்ளாததால் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. மேலும் கழிப்பறை குழாய் மற்றும் கதவுகள் சிதிலமடைந்துள்ளதால் மாணவிகள் கழிப்பறையை பயன்படுத்த மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக மாணவிகள் புகார் பெட்டியில் கடிதங்களை போட்டுள்ளனர். 

‘கழிவறை கதவுகள் எல்லாம் உடைஞ்சு இருக்கு, கம்பளிப்பூச்சிகள் உள்ளே இருக்குது, குழாய்கள் உடைந்து இருக்கு, தண்ணீர் வருவதில்லை, பக்கெட்கள் உடைந்து ஒன்றிரண்டுதான் இருக்கு, பாத்ரூம்கள் சரியா கழுவறத இல்லை அதலான ஸ்மெல் வருது. பிளிஸ் ஹெல்ப் பண்ணுங்க மிஸ்’ என அந்த புகார் கடிதங்களில் மாணவிகள் எழுதி உள்ளனர். 

பள்ளி நிர்வாகத்திடம்  நேரடியாக தெரிவிக்க முடியாத நிலையில், மாணவிகள் தங்களது பள்ளியில் உள்ள கழிவறையை சுகாதார மாற்றிட வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

கழிவறை சரியில்லை என மாணவிகள் புகார் தெரிவித்துள்ள பள்ளி வளாகத்திலேயே தான் பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Copying is disabled on this page!