விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் முழு உருவத்தை பனை ஓலையில் செய்து அசத்தியுள்ளார் பனை தொழிலாளி.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் பனைத் தொழிலாளி பால்பாண்டி. இவர் பனையேறும் தொழில் செய்து வந்த போது பனையில் இருந்து தவறி விழுந்தார்.
அதன் பின்னர் இவரால் பனை ஏற முடியாத நிலை ஏற்பட்டது.
அதன்பின்னர் பனை ஓலையில் ஆலய கோபுரம், கிறிஸ்தவ ஆலயம், தாஜ்மஹால், பீரங்கி, தம்பதியினர் மாட்டு வண்டியில் செல்வது போன்று என 50க்கும் மேற்பட்ட உருவங்களை பனை ஓலைகளால் செய்து அசத்தியுள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வர் காமராஜர், பள்ளி மாணவர் மாணவி உருவங்களை பனை ஓலையில் தத்துருவமாக செய்தார்.
இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்ததை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரது முழு உருவங்களையும் பனை ஓலைகளை தத்துருவமாக செய்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில், நாளைய தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பனை ஓலையை பயன்படுத்தி விநாயகர் முழு உருவத்தை உருவாக்கி அசத்தி உள்ளார் பால்பாண்டி. இந்த பனை ஓலையால் செய்யப்பட்ட விநாயகர் சிலை காண்பவர்களை கவரும் வண்ணம் உள்ளது.
விநாயகர் உருவத்தில் உள்ள கிரீடம் நகைகள் கோடாரி சூலாயுதம் உடைகள் என அனைத்தும் பனை ஓலையில் பால்பாண்டி செய்துள்ளார். இதை பார்க்கும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments