வாணியம்பாடி பள்ளிப்பட்டு ஏரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு
கடந்த 7-ந்தேதி விநாயகர் சதூர்த்தியன்று வாணியம்பாடி சுற்றுவட்டாரங்களில் விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது, வழிபாடு முடிந்து 3-ம் நாளான இன்று மாலை அந்த சிலைகளுடன், பொதுமக்கள் வீடுகளில் வழிபட்ட சிறிய களிமண் சிலைகளையும், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மற்றும் நகர மன்ற உறுப்பினர், செயலருமான vs சாரதிகுமார் கொடி அசைத்து நகர வீதியில் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா, உத்தரவின் பெயரில் வருவாய் கோட்டாட்சியர் அஜிதாபேகம் மேற்பார்வையில், நகர மற்றும் கிராமிய காவல் துறையினர், தலைமையில் போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வண்ணம் 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள்,11 காவல் ஆய்வாளர்கள், 69 உதவி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 452 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் அதற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு அரசு வழிகாட்டுதலின்படி, சிலைகள் வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள ஏரியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கபட்டது.
- பு.லோகேஷ் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்.
No comments