மீஞ்சூரில் மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் க.சுந்தரத்தின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார். நேற்றிரவு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் உடலுக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தும் வகையில் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் ஸ்டாலினுடன் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இன்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்திற்கு குடும்ப முறைப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியினர் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்குள்ள இடுகாட்டில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
No comments