மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டிகள் வழங்கும் விழா சபாநாயகர் முதலியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024 - 25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டிகள் வழங்கும் விழா சபாநாயகர் முதலியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பரமசிவம் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் அறிவுடைய நம்பி வரவேற்புரை ஆற்றி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாடி மிதிவண்டியை கொடுத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பரமசிவம் மாணவர்களையே பேசுகையில் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், மாணவர்களின் ஒழுக்கங்கள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், சைக்கிளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் போன்ற கருத்துக்களை எடுத்துக் கூறி மாணவர்களை ஊக்குவித்தார்.
சபாநாயகர் முதலியார் மேல்நிலைப்பள்ளி, எல் எம் சி மேல்நிலைப்பள்ளி, சியாமளா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கடேசா மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 767 மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் அரசின் விலையில்லா யில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன், திமுக ஒன்றிய தலைவர் ஏ ஜி ஜே பிரபாகரன், SMH மேல்நிலைப்பள்ளி முதல்வர் அறிவுடைநம்பி, எல் எம் சி மேல்நிலைப்பள்ளி முதல்வர் ரூபி பிளாரன்ஸ், சியாமளா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கீதா, வெங்கடேசா மேல்நிலைப்பள்ளி முதல்வர் நாராயணன், ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி முதல்வர் குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
சபாநாயகர் முதலியார் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் எஸ். முரளிதரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிறைவாக வெங்கடேசா மேல்நிலைப்பள்ளி முதல்வர் நாராயணன் நன்றி கூறினார்.
No comments