ஆக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், ஆக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா எம்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஆக்கூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஆக்கூர் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி, திருக்கடையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மூன்று பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் ஆக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி திருக்கடையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மூன்று பள்ளி ஆசிரியர்களுக்கு எம் எல் ஏ நிவேதா முருகன் நினைவு பரிசாக பேனா வழங்கி வாழ்த்துக்களை கூறினார்.
இதில் மயிலாடுதுறை மாவட்ட திமுக துணைச் செயலாளர் மு.ஞானவேலன், செம்பை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமுர்த.விஜயகுமார், செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சாந்தி வேல்முருகன், வெண்ணிலா தென்னரசு, தலைமை ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, முனைவர் குமார் மற்றும் இருபால் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments