மீஞ்சூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி. பொன்னேரி எம்எல்ஏ கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
மீஞ்சூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 187 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி. பொன்னேரி எம்எல்ஏ கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மேல்நிலை கல்வி பயிலும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 187மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ துரை.சந்திரசேகர் அனைத்து மாணவர்களும் +2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், கல்விக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வரும் நிலையில் அனைவரும் கல்வியில் முன்னேற வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் ப. அலெக்சாண்டர், பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி, மீஞ்சூர் முன்னாள் திமுக பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் குமாரி புகழேந்தி, சங்கீதா சேகர், அபூபக்கர், காங்கிரஸ் கட்சி நிர்வாகி மணவாளன், குரு சாலமன், மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments