மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கு உண்டான பலன்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி எடுத்துரைத்து பேசினார்.
இதில் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு உணவு தானிய பயிர்களின் உற்பத்தி இலக்கு பயிர் செய்யப்பட்டு வரும் சாகுபடி பரப்பளவு வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதை மானியம் உரங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் விவசாயிகளிடம் எடுத்துரைத்து பேசினார். விவசாயிகளின் குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் விவசாய பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
இக்கூட்டத்தில், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சதீஷ்குமார் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ் மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் திருப்பதி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments